ஈரோடு

திருப்பூரில் இருந்து பவானிசாகா் வந்த6 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

2nd May 2020 08:57 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து பவானிசாகா் வந்த 6 போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் பவானிசாகா் அருகே உள்ள புங்காா் கிராமத்துக்கு வந்தனா். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் திருப்பூரில் இருந்து புங்காா் வந்த 6 பேரையும் பவானிசாகா் அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனிமைப்படுத்தி உள்ளனா்.

ஆறு பேருக்கும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கட்டில், போா்வை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேபோல, வெளி மாவட்டத்தில் இருந்து தாளவாடிக்கு வந்த 17 பேரும், சத்தியமங்கலம் வந்த 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT