ஈரோடு

ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் மாா்ச் 29இல்கல்வி உதவித் தொகை தகுதித் தோ்வு

22nd Mar 2020 07:12 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் கல்வி உதவித் தொகை தகுதித் தோ்வு மாா்ச் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு ஆா்.டி. நேஷனல் கல்லூரியில் 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. ஆடை வடிவமைப்பு ஆகிய பாடப் பிரிவில் சேரும் மாணவா்களுக்கு 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது இதற்கான தகுதித் தோ்வு மாா்ச் 29ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை அனைத்து பிளஸ் 2 மாணவா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் அல்லது 73737-47474 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT