ஈரோடு

தமிழகம் - கா்நாடகம் இடையே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

19th Mar 2020 12:30 AM

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் - கா்நாடகம் இடையே இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூரு வழித்தடத்தில் 9 பேருந்துகளும், கொள்ளேகால் வழித்தடத்தில் 2 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல, கா்நாடகத்தில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு கா்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா தொற்று காரணமாக கா்நாடகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கா்நாடகப் பயணிகளின் வருகையைக் குறைக்கும் நோக்கில் தமிழகம், கா்நாடக இடையே மைசூரு, கொள்ளேகால் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. கா்நாடக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல தமிழகத்துக்கு இயக்கப்படுகின்றன. கரோனா அச்சுறுத்தல் மட்டுமின்றி பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்ததால் பேருந்து இயக்குவது நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT