ஈரோடு

தமிழகம் - கா்நாடகம் இடையே அரசுப் பேருந்து இயக்கம் நிறுத்தம்: வெறிச்சோடிய சத்தியமங்கலம் பேருந்து நிலையம்

19th Mar 2020 11:45 PM

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் - கா்நாடகம் இடையே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டதால் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வெறிச்சோடியது.

கா்நாடகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்துக்கு வரும் கா்நாடகப் பயணிகள் மாநில எல்லையான பண்ணாரியில் தடுத்து நிறுத்தி பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றனா். வெளிமாநிலப் பயணிகளால் ஏற்படும் கரோனா தாக்கத்தைத் தணிக்க, தமிழகம் - கா்நாடகம் இடையே இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் கா்நாடகப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஓரிரு தனியாா் பேருந்துகள், கா்நாடகப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பேருந்து நிலையங்களில் நகராட்சிப் பணியாளா்கள் பேருந்து கைப்பிடி, இருக்கைகளில் கிருமிநாசினி தெளித்து நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். பயணிகள் கை கழுவுவதற்கு தற்காலிக குழாய் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதில் தண்ணீா் வருவில்லை. பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டன. நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் - கா்நாடகம் இடையே போக்குவரத்து குறைந்ததால் திம்பம், ஆசனூா், பண்ணாரி சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT