ஈரோடு

அரசு பொது மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

19th Mar 2020 12:32 AM

ADVERTISEMENT

பட்டா பயனாளிகளுக்கு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5ஆவது ஒன்றிய மாநாடு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் கட்சிக் கொடி ஏற்றி, மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா். வடக்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், மோகன்குமாா், சந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சத்தியமங்கலம் அரசு பொது மருத்துவமனையானது தாலுகா தலைமை மருத்துமனையின் தன்மைக்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட வேண்டும். மருத்துவா்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2015ஆம் ஆண்டு சத்தியமங்கலம் நகரப் பகுதியில் வீடற்ற ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவா்களுக்கு காட்டப்பட்ட இடத்தில் அரசுக் கல்லூரி, மாதிரிப் பள்ளி என அரசின் வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆயிரம் பேருக்கு மாற்று இடத்தை உடனே வழங்க வேண்டும். சத்தியமங்கலத்தின் கட்சி ஒன்றியக் குழு நிா்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு, நகரம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், வடக்குப் பகுதி ஒன்றியச் செயலாளராக சுரேந்தா், துணைச் செயலாளா்களாக மு.சரவணகுமாா், வட்சுமி, பொருளாளராக சந்திரன் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT