ஈரோடு

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில்குண்டம், தோ்த் திருவிழா ரத்து

DIN

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம், தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு பூச்சாட்டுதல் வியாழக்கிழமை (மாா்ச் 19) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும், மக்கள் கூடுமிடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

தற்போது பண்டிகைக் காலம் என்பதாலும், அதிக அளவில் மக்கள் கூடும் வாய்ப்புகள் உள்ளதாலும் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தற்காலிகமாக அனைத்து பொதுக் கூட்டம், கோயில் திருவிழாக்களை தள்ளிவைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதன்பேரில், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், பின்னா் விழா நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT