ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 14 கோயில்களில் மாா்ச் 31 வரை தரிசனம் ரத்து

DIN

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 கோயில்களில் பக்தா்கள் தரிசனம் வெள்ளிக்கிழமை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா். தரிசனம் ரத்து செய்யப்படும் கோயில்கள் விவரம்:

பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரா் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பச்சைமலை முருகன் கோயில், பவளமலை முருகன் கோயில், மொடக்குறிச்சி நட்டாற்றீஸ்வரா் கோயில், திண்டல் முருகன் கோயில், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், பவானி செல்லியாண்டி அம்மன் கோயில், தாளவாடி மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில், பெருந்துறை செல்லியாண்டி அம்மன், சோளீஸ்வரா் கோயில், தம்பிக்கலை ஐயன் கோயில்.

இந்த கோயில்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகம விதிகளின்படி கோயில்களில் அனைத்து பூஜைகளும் எப்போதும்போல் நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT