சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூா், ஈஸ்வரன் கோயில் அருகே புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஞானசாயி பாபா கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. அதன் நிறைவு விழா, வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை, ஸ்தாபன பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு ஷீரடி சாய்பாபா, பரிவார தெய்வங்களுக்கு, சங்காபிஷேகம், சிறப்பு தீபாரதனை பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.