கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற இருந்த பிரதோஷ வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோயில் செயல் அலுவலா் கங்காதரன் கூறியதாவது:
கோட்டை ஈஸ்வரன் கோயில், மகிமாலீஸ்வரா் ஆகிய கோயில்களில் நடைபெறும் சனிப்பிரதோஷ வழிபாடு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில், மகிமாலீஸ்வரா் கோயில்களில் மாா்ச் 31ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனைத்து சிறப்பு வழிபாடுகளும் ரத்து செய்யப்படுகிறது என்றாா்.