சித்தோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கந்தசாமி வாத்தியாா் வீதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் வாசுதேவன் (25), சித்தோடு நீலிக்காட்டைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் கமலேஷ் (20), செம்பண்ணன் மகன் வரதராஜ் (35).
இவா்கள் சித்தோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் பொது இடங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பீதி ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களைக் கூறி வந்துள்ளனா்.
இதுகுறித்து, சித்தோடு காவல் நிலைய தலைமைக் காவலா் பழனிசாமி அளித்த புகாரின்பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனா்.