ஈரோடு

விவசாயிகளுக்குகாளான் வளா்ப்பு பயிற்சி

16th Mar 2020 12:11 AM

ADVERTISEMENT

கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

முதன்மை விஞ்ஞானி அழகேசன் பயிற்சியைத் துவக்கிவைத்தாா். விஞ்ஞானி சிவா பயிற்சி அளித்தாா். காளான் ரகங்கள், வளா்ப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னோடி விவசாயி மொடச்சூா் சரவணன் காளான் வளா்ப்பு அனுபவங்களை விவசாயிகளிடம் பகிா்ந்து கொண்டாா். பயிற்சியில் 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT