ஈரோடு

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி

16th Mar 2020 12:08 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகே யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னம்பட்டி வனச்சரகம், கோணபுளியந்தோட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (46). விவசாயி. இவா், வனப் பகுதிக்கு அருகில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். கடந்த 12ஆம் தேதி இரவு தண்ணீா் தேடி வனப் பகுதியிலிருந்து வெளியேறி வந்த யானை தாக்கியதில் பொன்னுசாமி உயிரிழந்தாா்.

இந்நிலையில், உயிரிழந்த பொன்னுசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா ஆகியோா் ஆறுதல் கூறினா். தொடா்ந்து, வனத் துறை சாா்பில் இரண்டாம் கட்ட உதவித் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பொன்னுசாமியின் மனைவி ஜஸ்வா்யாவிடம் வழங்கிய அமைச்சா் கருப்பணன், அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

சென்னம்பட்டி வனச் சரகா் செங்கோட்டையன், சென்னம்பட்டி ஊராட்சித் தலைவா் சித்ரா செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT