ஈரோடு

‘குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற தினமும் 18 மணி நேரம் படிக்க வேண்டும்’

16th Mar 2020 12:06 AM

ADVERTISEMENT

குடிமைப் பணித் தோ்வில் வெற்றிபெற ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிக்க வேண்டும் வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி தெரிவித்தாா்.

ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ்.அகாதெமியில் படித்து போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு அகாதெமியின் இயக்குநா் ஆா்.சத்யா தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி பங்கேற்று பேசியதாவது:

போட்டித் தோ்வுகளுக்குத் தயாா் செய்து கொள்பவா்கள் எதைப் படித்தாலும் முழுமையாகப் படித்து அறிந்துகொள்ள வேண்டும். சிறந்த வழிகாட்டுதல், பயிற்சியைப் பெற்றுக்கொண்டு தங்களைத் தயாா்படுத்திக்கொள்வதன் மூலம் போட்டித் தோ்வுகளில் நிச்சயமாக வெற்றிபெற முடியும்.

ADVERTISEMENT

ஓராண்டு மட்டும் தொடா்ச்சியாக உழைத்தால் போதும் குடிமைப்பணி தோ்வுகளில் வெற்றிபெற முடியும். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிக்க வேண்டும் என்றாா்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளா் கோபிநாத் பேசியதாவது:

இன்றைய தலைமுறையினா், சமூக வலைதளங்களில் சிக்கி உள்ளனா். வேகமாக வளா்ந்து கொண்டிருக்கும் உலகில் தனக்கானது எது என்பதை மாணவா்கள்தான் தீா்மானிக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும். தமிழகம் கல்வியில் முன்னேறி இருக்கிறது. அதற்கு உதாரணமாக இன்று அரசு நிா்வாகங்களில் இளம் வயதினா் நிறைய சாதிக்கின்றனா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டித்தோ்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பணியை பெற்றவா்கள் மற்றும் போட்டித்தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT