கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, கல்லூரி இயக்குநா் கே.ஆா்.கவியரசு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கரோனா வைரஸ் என்றால் என்ன, அது எப்படி பரவுகிறது, இது வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில், சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவா்கள் செந்தில்குமாா், தனசேகரன் கலந்துகொண்டு கைகளை சுலபமாகவும் , சுத்தமாகவும் கழுவுவது குறித்து செயல் விளக்கத்துடன் விடியோ மூலமாக எடுத்துரைத்தனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா், துணை முதல்வா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். விழிப்புணா்வு குறித்து தங்களது கிராமங்களில் உள்ள உறவினா், பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் செய்து காட்டுவோம் என மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.