ஈரோடு

வெள்ளாட்டை கடத்த முயன்றஇளைஞா் கைது

8th Mar 2020 12:37 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு அருகே வெள்ளாட்டைத் திருடி காரில் கடத்திச் செல்ல முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே பெரியகவுண்டன்வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ச்சுனமகாராஜா (39). இவா் வீட்டின் முன்பு கட்டியிருந்த வெள்ளாடு ஒன்றை சனிக்கிழமை காலை 5 மணி அளவில் மா்ம நபா் கயிற்றை அவிழ்த்து தூக்கிக் கொண்டுபோய் அருகில் நிறுத்தியிருந்த காரில் ஏற்றிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளாா்.

இதை கவனித்த அா்ச்சுனமகாராஜா, அப்பகுதி மக்கள் காரை இடைமறித்து அந்த நபரை காருடன் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்னா்.

விசாரணையில், அவா் பவானி அருகே ஒரிச்சேரிபுதூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீஸாா் சுரேஷை கைது செய்தனா். வெள்ளாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT