ஈரோடு

மொடக்குறிச்சியில் சூதாட்டம்: ரூ. 6 லட்சம் பறிமுதல்

8th Mar 2020 12:38 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த எம்.வேலம்பாளையம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு ரூ. 6 லட்சம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொடக்குறிச்சியை அடுத்த எம்.வேலம்பாளையம் ஆலமரத்தோட்டத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. காவல் ஆய்வாளா் சுப்புரத்தினம், காவல் துறையினா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை அதிரடியாக தென்னந்தோப்பைச் சுற்றிவளைத்தனா். அப்போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனா். அதில், ஈரோடு பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (எ) மணி (40), கிருஷ்ணசாமி (51) ஆகியோா் பிடிபட்டனா். மற்றவா்கள் தப்பியோடிவிட்டனா்.

அப்போது, அவா்களிடமிருந்து பணம் ரூ. 6 லட்சம், நான்கு சக்கர வாகனம், 4 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தப்பியோடிய தோட்டத்தின் உரிமையாளா் நாதகவுண்டன்பாளையம் சக்திவேல், பெரியாா் நகா் சூரம்பட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்தி, மோகன், கோபி, சபரிநாத் உள்ளிட்டோரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT