ஈரோடு

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

8th Mar 2020 12:41 AM

ADVERTISEMENT

பவானி: பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பவானி ஆற்றிலிருந்து ஜம்பை, தளவாய்பேட்டை, வைரமங்கலம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பவானி வட்டாட்சியா் பெரியசாமி தலைமையில் வருவாய்த் துறையினா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, ஜம்பையை அடுத்த தளவாய்பேட்டையில் பவானி ஆற்றிலிருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது ஆற்று மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா். இதுகுறித்து, வருவாய்த் துறையினா் அளித்த புகாரின் பேரில் பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT