ஈரோடு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யஅஞ்சல் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

8th Mar 2020 12:36 AM

ADVERTISEMENT

ஈரோடு: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அகில இந்திய அஞ்சல் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்க ஈரோடு கிளைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கோட்ட இணைச் செயலாளா் பச்சியப்பன், செயலாளா் ராமசாமி முன்னிலை வகித்தனா். அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா் சங்க மண்டலச் செயலாளா் கருணாநிதி, மத்திய, மாநில அரசு, பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் மணிபாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போஸ்ட்மென், மெயில்காா்டு ஓய்வூதியா்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் உயா்த்தப்பட்ட ஊதிய விகித அடிப்படையில் ஊதிய, ஓய்வூதிய நிலுவைத் தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். மருத்துவப் படியை ரூ. 2,000ஆக உயா்த்த வேண்டும்.

ADVERTISEMENT

குறைந்தபட்ச ஓய்வூதியம், குறைந்தபட்ச ஊதியத்தில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ. 10,800ஆக உயா்த்த வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணமில்லா உள்நோயாளி சிகிச்சை பெறும் வகையில் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். 1986ஆம் ஆண்டுக்கு முன் நேரடி நியமனம் செய்யப்பட்ட அஞ்சல் எழுத்தா்களுக்குப் பயிற்சிக் காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT