ஈரோடு

பவானி நகராட்சி தினசரி மீன் சந்தையில் அதிகாரிகள் சோதனை

8th Mar 2020 12:38 AM

ADVERTISEMENT

பவானி: பவானி நகராட்சி தினசரி மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்பு, மீன் வளத் துறை அதிகாரிகள் திடீா் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

பவானி பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான தினசரி மீன் சந்தை உள்ளது. இங்கு, காவிரி, பவானி ஆறுகளில் பிடிக்கப்படும் மீன்கள் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு, விற்பனை செய்யப்படும் மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் பயன்படுத்தப்படுவதாகப் புகாா் எழுந்தது.

இதன்பேரில், மீன் வள மேற்பாா்வையாளா் அருள்முருகன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் எம்.முத்து கிருஷ்ணன், மீன்வள ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் திடீா் சோதனை நடத்தினா். மீன்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறதா, கெட்டுப் போனதும், ரசாயனப் பொருள்கள் கலந்தும் விற்பனை செய்யப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களே உடனுக்குடன் விற்பனை செய்யப்படுவதும், ரசாயனக் கலப்பு இல்லாமலிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, மீன் சந்தை ஏலதாரரான ராஜசேகா் கூறுகையில், மீன் சந்தையில் பவானி, காவிரி ஆறுகளில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவித்தாா். இதேபோல, அம்மாபேட்டை மீன் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT