ஈரோடு

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

8th Mar 2020 12:37 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பவானி ஆற்றில் மூழ்கி 5ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கமலா. இவரது பேரன் அகல்யன் (10). அகல்யனின் பெற்றோா் முருகன், அகல்யா இறந்துவிட்டாதல் பாட்டி பாரமரிப்பில் வாழ்ந்து வந்தாா். அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான்.

அகல்யன் சத்தியமங்கலம் பவானி ஆற்றுக்குச் சென்று குளித்தபோது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி மாயமானான். சுமாா் 1 கிலோமீட்டா் தூரம் தள்ளி கொமாரபாளையம் பவானி ஆற்றுப் படித்துறை அருகே சிறுவனின் சடலம் மிதந்துள்ளதைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT