ஈரோடு

நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சாவு

8th Mar 2020 12:40 AM

ADVERTISEMENT

பவானி: சித்தோடு அருகே கூரியா் வாகனம் மோதியதில் சாலையின் நடுவே நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி மகன் சிலம்பரசன் (26). நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் ஓட்டுநரான இவரும், அதை ஊரைச் சோ்ந்த சின்னக்குழந்தை (23) என்பவரும் கேரள மாநிலத்தில் தங்கி நெல் அறுவடைப் பணிகள் மேற்கொண்டு வந்தனா். அறுவடைக் காலம் முடிவடைந்ததால் இருவரும் நெல் அறுவடை இயந்திரத்துடன் திருவண்ணாமலை திரும்பிக் கொண்டிருந்தனா்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த சமத்துவபுரம் மேடு அருகே சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, கோவையிலிருந்து சென்னைக்குச் சென்ற கூரியா் வாகனம் அறுவடை இயந்திரத்தின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய இயந்திரம் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற சின்னக்குழந்தை அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT