ஈரோடு

தீ விபத்தில் குடிசை சேதம்

8th Mar 2020 12:41 AM

ADVERTISEMENT

பவானி: பவானி அருகே தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

பவானியை அடுத்த மைலம்பாடி, கல்வாநாயக்கனூா் காலனியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து மகன் சண்முகம் (65). கூலி தொழிலாளியான இவா் வேலைக்கு சனிக்கிழமை சென்றுவிட்டாா். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குடிசை வீட்டில் தீப்பிடித்துள்ளது. காற்று வீசியதால் தீ பிற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலா் காந்தி தலைமையிலான தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இவ்விபத்தில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT