ஈரோடு

ஜல்லியூா் பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

8th Mar 2020 12:42 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டங்களில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க ஜல்லியூா் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே மேட்டூா் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை தென்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக திலகவதி என்பவரது தோட்டத்தில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமரா பொருத்தி கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஜல்லியூா் பகுதியில் விவசாயி பழனிசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 வெள்ளாடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இந்நிலையில், மேட்டூா் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டை விளாமுண்டி வனத் துறையினா் வாகனத்தில் ஏற்றி ஜல்லியூா் பகுதியில் உள்ள பழனிசாமி என்பவரின் தோட்டத்துக்கு கொண்டு சென்று அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ள பகுதியில் கூண்டை இறக்கி வைத்தனா். மேலும், அப்பகுதியில் 3 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT