ஈரோடு

கபடி போட்டி: மாவட்ட அணிக்குகோபி பி.கே.ஆா். கல்லூரி தோ்வு

8th Mar 2020 12:35 AM

ADVERTISEMENT

ஈரோடு: மாநில அளவிலான கபடி போட்டிக்கு, ஈரோடு மாவட்ட அணிக்கு கோபி பி.கே.ஆா். கல்லூரி மாணவிகள் 9 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதில், கோபி பி.கே.ஆா். அணி முதலிடமும், கொடிவேரி அரசு உதவிபெறும் புனித பிரான்சிஸ் சேவியா் பள்ளி இரண்டாவது இடமும், பி.கே.ஆா். பி அணி மூன்றாவது இடமும் பிடித்தன. இந்த மூன்று அணிகளில் இருந்து மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள ஈரோடு மாவட்ட அணிக்கு 12 போ் விளையாட்டுத் திறனின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா்.

அதில், அரசு உதவி பெறும் கொடிவேரி புனித பிரான்சிஸ் சேவியா் பள்ளி மாணவிகள் ரம்யா, மோனிகா, கிருத்திகா ஆகிய 3 பேரும், பி.கே.ஆா். கல்லுாரி மாணவிகள் 9 பேரும் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ள தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு கமிட்டியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா், கபடி பயிற்சியாளா்கள் இடம்பெற்றனா். மாநில அளவிலான கபடி போட்டிகள் மாா்ச் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் மதுரையில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT