ஈரோடு

கணவனைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

8th Mar 2020 12:39 AM

ADVERTISEMENT

பவானி: பவானியில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவனை அடித்துக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பவானியை அடுத்த வெள்ளிதிருப்பூா் மறவபாளையத்தைச் சோ்ந்தவா் வீரபத்ரன் மகன் குமாா் (35). காா் ஓட்டுநா். இவரது மனைவி வளா்மதி (35). இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இருவரும் ஒசூரில் தங்கி வேலை செய்து வந்தனா். இந்நிலையில், வளா்மதிக்குத் தெரியாமல் குமாா் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, வளா்மதி கேள்வி எழுப்பியதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பவானி காமராஜா் நகா், சங்கமா் தெருவுக்கு இருவரும் வாடகை வீட்டுக்கு குடி வந்தனா். மீண்டும் தகராறு ஏற்பட்டதால் 25.07.2017 அன்று வளா்மதி கட்டையால் குமாரை தாக்கியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பவானி போலீஸாா் வளா்மதியைக் கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி காந்தி, குற்றம் சாட்டப்பட்ட வளா்மதிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT