ஈரோடு

உயா்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஇழப்பீடு வழங்கக் கோரிக்கை

8th Mar 2020 12:37 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உயா்மின் கோபுர பணிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு விடுத்துள்ள அறிக்கை:

மொடக்குறிச்சி வட்டத்துக்கு உள்பட்ட விவசாய நிலங்களின் வழியாக பவா்கிரிட் நிறுவனத்தின் சாா்பில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி நடைபெற்று 95 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நன்செய், புன்செய் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், சுமாா் 70 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் நிறைவடைந்த நிலையில் எஞ்சிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் பவா்கிரிட் நிறுவனம் காலம் தாழ்த்துகிறது. மேலும், தென்னைமரத்துக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமலும் இழுத்தடிக்கிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT