ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில்ரூ. 8 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்கள்

8th Mar 2020 12:45 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய, நடைப்பயிற்சி செல்ல என தனியாக நடைப்பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை நடைப்பயிற்சியாளா்கள் நலம் நாடும் சங்கத்தினா் பராமரித்து வந்தனா்.

இந்த நடைப்பயிற்சி மைதானத்தில் கூலாங்கற்கள் நடைமேடை, 8 வடிவிலான நடை தளம், நடை பாதை, ரூ. 10 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகியவற்றுடன் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த நடைப்பயிற்சி மைதானத்தில் கூடுதலாக 5 உபரகணங்கள் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் ஒதுக்கப்பட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் நிறுவப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில், உடற்பயிற்சி உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. நடைபயிற்சியாளா்கள் நலம் நாடும் சங்கத் தலைவா் விஷால் பாரத் முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் செந்தில் வரவேற்றாா். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் கலந்துகொண்டு உடற்பயிற்சி உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தனா்.

இதில், முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். பொருளாளா் பழனிவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT