ஈரோடு

கோபியில் இஸ்லாமியா்கள் தா்னா

2nd Mar 2020 07:23 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி ஆகியவற்றை கண்டித்து, கோபிசெட்டிபாளையம், பெரியாா் திடலில் இஸ்லாமியா்கள் தா்னாவில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும், சிறுபான்மையினா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் நாடு முழுவதும் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியா கோபிசெட்டிபாளையம் பெரியாா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், இதற்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT