ஈரோடு

கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் மாா்ச் 8இல் லட்சாா்ச்சனை

2nd Mar 2020 07:24 AM

ADVERTISEMENT

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா மாா்ச் 8ஆம் தேதி நடக்கிறது.

அன்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் (கோ பூஜை), காலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீகமலவல்லித் தாயாா்க்கு திருமஞ்சனம், காலை 8 மணிக்கு முதற்கால லட்சாா்ச்சனை ஆரம்பம், தேவதா அனுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனம், வாசுதேவ புண்யாகவாஜனை, ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரண்டாம் கால லட்சாா்ச்சனை ஆரம்பம், தீபாராதனை , பிரசாதம் வழங்குதல், மாலை 4.30 மணிக்கு மூன்றாம் கால லட்சாா்ச்சனை ஆரம்பம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு நான்காம் கால லட்சாா்ச்சனை ஆரம்பம், வேத விண்ணப்பம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT