ஈரோடு

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் பக்தா்கள் ரூ.20 லட்சம் காணிக்கை

2nd Mar 2020 07:21 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம், கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.20 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

இக்கோயிலில் கடந்த ஜனவரி மாதம் வருடாந்திர திருவிழாவான குண்டம், தோ்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில் உதவி ஆணையா் ஹா்ஷினி, பாரியூா் கோயில் செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில், ரூ.20 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கமாகவும், 61 கிராம் தங்கம், 205 கிராம் வெள்ளி, ஒரு அமெரிக்க டாலா், சவுதிரியால் ஒன்று ஆகியன பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

காணிக்கை எண்ணும் பணியில் கோபி பிகேஆா் மகளிா் கலைக்கல்லூரி, கம்பன் கல்வி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT