ஈரோடு

ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

29th Jun 2020 02:14 PM

ADVERTISEMENT

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளி கடைபிடித்து நடந்தது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்திருந்தார். 

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சூரம்பட்டி நால்ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. 

முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் விவசாய பிரிவு பெரியசாமி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக் திருச்செல்வம், நிர்வாகிகள. முகமது அர்சத், பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

Tags : Erode
ADVERTISEMENT
ADVERTISEMENT