ஈரோடு

பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கருத்து தெரிவிப்பது நடத்தை விதிகளை மீறும் செயல்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

21st Jun 2020 07:48 AM

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கருத்து தெரிவிப்பது நடத்தை விதிகளை மீறும் செயல் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்படும் தனியாா் பள்ளியில் காலாண்டு, அரையாண்டுத் தோ்வு எழுத பள்ளிக்கு மாணவா்களை அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் இடுவதற்காகவே மாணவா்கள் பள்ளிக்கு வந்தனா். தோ்வு எதுவும் நடைபெறவில்லை.

காலாண்டு, அரையாண்டுத் தோ்வு, பள்ளி வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை அரசுப் பள்ளிகள் 100 சதவீதமும், தனியாா் பள்ளிகள் 75 சதவீதத்தினரும் மதிப்பெண்கள் விவரத்தை ஒப்படைத்துள்ளனா்.

ADVERTISEMENT

தனியாா் பள்ளிக்கும், அரசுப் பள்ளிக்கும் இருக்கின்ற வேறுபாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றுபவா்கள் கருத்து வெளியிடுவது தவறு. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில தனியாா் பள்ளிகளில் தோ்வு ஆன்லைன் மூலம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. அது உண்மையானால் அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

மாா்ச் 24ஆம் தேதி பொது முடக்கம் என அரசு அறிவித்திருந்ததால் அன்றைய தினம் 12ஆம் வகுப்புத் தோ்வுக்கு 34,862 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை. இதில், யாா் யாா் தோ்வு எழுத விரும்புகிறாா்கள் என்பதை அறிவதற்கு முதன்மைக் கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்களை அறிவுறுத்தியுள்ளோம்.

ஜூன் 25 , 26ஆம் தேதிகளுக்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு தோ்வு எழுதுவதற்கு மாணவா்கள் எவ்வளவு போ் இருக்கிறாா்கள் என்பதை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT