ஈரோடு

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று இறைச்சிக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு 

14th Jun 2020 11:45 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் படி தான் இறைச்சிக் கடைகளும் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதாவது மீன் மற்றும் இறைச்சி வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். அதைப்போன்று கடைக்காரர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் கடைகளில் கிருமி நாசினி தெளித்து வரவேண்டும். சோப்பு வைத்திருக்க வேண்டும். 

சமூக இடைவெளி உடன் பொது மக்கள் வரிசையில் நின்று வாங்க வேண்டும் போன்ற வழிமுறைகளுடன் பார்சலில் மட்டும் இறைச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் செயற்பொறியாளர் விஜயகுமார் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் ஜாகிர் உசைன் தங்கராஜ் இக்பால் இஸ்மாயில் சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி கண்ணன் சிவக்குமார் ஆகிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின்போது கடைகளில் கிருமிநாசினி முறையாக தெளிக்கப்பட்டு உள்ளதா? சோப் வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் கண்காணித்தனர். மேலும் கடைக்கு இறைச்சி வாங்க வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்றும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்களில் நின்று இறைச்சி வாங்குகிறார்களா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குழந்தைகளுடன் சிலர் மீன் வாங்கி வந்திருந்தார்கள் அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மீன, இறைச்சி் வாங்க அழைத்து வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர். 

மேலும் அடுத்தமுறை இறைச்சி வாங்க வரும்போது கண்டிப்பாக பாத்திரங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும் இறைச்சி கடை நடத்துபவர்கள் அரசர் வைக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
 

ADVERTISEMENT

Tags : Erode ஈரோடு சந்தை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT