ஈரோடு

மருத்துவ படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

11th Jun 2020 12:36 PM

ADVERTISEMENT

ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு வ உ சி பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த தற்காலிக மார்க்கெட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். எம். எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தற்காலிக மார்க்கெட்டை ஒரு பெண் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- நமது மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டாம் நிலையான ரெட் சோன் என்ற நிலையை மாற்றி முதல் முதலில் நமது மாவட்டம் கிரீன் சோன் என்ற நிலைக்கு மாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், அனைத்து மருத்துவர்கள் அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அயராது உழைத்து அதனடிப்படையில் பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் நாம் என்று இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். அதற்கு முதலில் எனது நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். 

நாள்தோறும் அனைத்து துறை அலுவலர்களும் அழைத்து பேசி வருகிறார். நமது மாவட்ட வியாபாரிகள் சமூக இடைவெளி வேண்டும் என்ற முறையில் ஒரு கோடி ரூபாய் செலவில் வ உ சி பூங்கா பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு700 கடைகள் உள்ளன. திண்டல் மேம்பாலம் பொருத்தவரை நமது முதலமைச்சர் ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தற்போது ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. 

விரைவிலேயே முதல்வர் அந்தப் பணி முடிந்தவுடன் நிதிகள் ஒதுக்கப்படும் அதற்கான ஆணைகயை அறிவித்துள்ளார் அப்படி வரும்போது இட நெருக்கடி இல்லாத நிலை உருவாகும். மருத்துவ படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் அறிவிப்பார். பத்தாம் வகுப்பு தேர்வை பொருத்தவரை முதல்வர் கலந்தாலோசித்து ஆல் பாஸ் என்று அறிவித்தார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் காலாண்டு தேர்வில் அடிப்படையில் மதிப்பெண் 40 மதிப்பெண், அரையாண்டு தேர்வு அடிப்படையில் 40 மதிப்பெண் என மொத்தம் 80 மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. 

ADVERTISEMENT

தனித்தேர்வர்கள் நிலை குறித்து அரசு பரிசீலித்து அறிவிக்கும் நூலகத்தைப் பொருத்தவரை தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். எனவே நூலகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரையாண்டு காலாண்டு தேர்வில் பெயில் ஆகி விட்டால் என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல இயலாது, இதுகுறித்து அரசு ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கும் பாடநூல் குறைப்பது குறித்து 16 கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அறிக்கை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் எஸ்பி சக்தி கணேசன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் உதவி ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Tags : Erode sengottaiyan செங்கோட்டையன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT