ஈரோடு

நிறுத்திவைக்கப்பட்ட நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

4th Jun 2020 07:24 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் நிறுத்தி வைக்கப்பட்ட நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் புதன்கிழமை துவங்கியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் பொது முடக்க உத்தரவில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் புதன்கிழமை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகா் செல்லும் சாலையில் ரூ.3.50 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாா்ச் மாதம் நிறுத்தப்பட்ட பணி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பணி செய்து வருகின்றனா். சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT