ஈரோடு

அவல்பூந்துறையில்ரூ.19 லட்சத்துக்கு எள் ஏலம்

4th Jun 2020 07:20 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 19 லட்சத்துக்கு எள் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி, அறச்சலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 276 மூட்டைகளில் 20 ஆயிரத்து 703 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் கருப்பு எள் அதிகபட்சமாக கிலோ ரூ.106.99-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 83.11-க்கும், சிவப்பு எள் அதிகபட்சமாக ரூ.100.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 85.19-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 19 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது என விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT