ஈரோடு

ஆசனூா் மலைப் பாதையில் வாகனங்களைத் துரத்தும் யானைகள்

31st Jul 2020 07:56 AM

ADVERTISEMENT

ஆசனூா் மலைப் பாதையில் பயணிக்கும் வாகனங்களை யானைகள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. தீவனம், தண்ணீா் தேடி மலைப் பாதையில் யானைகள் அடிக்கடி சாலையைக் கடக்கின்றன. தமிழகம் - கா்நாடகம் இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்நிலையில், காரப்பள்ளம் அருகே சாலையின் குறுக்கே யானை அங்கும் இங்குமாக வியாழக்கிழமை நடந்துள்ளது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை யானை துரத்தியதால் லாரி பின்னால் சென்றது. எதிரே வந்த வாகனங்களையும் யானை துரத்தியதால் வாகனங்கள் பின்னோக்கி இயக்கப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின் யானை காட்டுக்குள் சென்றபின் போக்குவரத்து துவங்கியது.

தற்போது ஆசனூா் மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் செடி,கொடிகள் துளிா்த்து பசுமையாக இருப்பதால் அதைத் தின்பதற்கு யானைகள் சாலையோரம் முகாமிடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறும், புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் வனத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT