ஈரோடு

ஈரோட்டில் நெகிழ்ச்சி: வயதான தம்பதியிடம் செல்லாத ரூ. 25 ஆயிரம் பெற்றுக்கொண்டு காசோலை தந்த ஆட்சியர்!

13th Jul 2020 01:05 PM

ADVERTISEMENT

செல்லாத ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு வயதான தம்பதியருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பொதிய முப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சோமு (வயது 58). பார்வையற்றவர் இவரது மனைவி பழனியம்மாள் (53) மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு குழந்தை கிடையாது. இந்நிலையில் சோமு சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது தாயிடம் கொடுத்து உள்ளார். தற்போது கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால் செலவுக்கு திணறிய சோமு தன் தாயிடம் தான் சேர்த்து வைத்திருந்த செலவுக்காக தான் சேர்த்து வைத்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அவரது தாய் ஏற்கனவே அந்த பணத்தை ஒரு பானையில் வைத்திருந்தார் அந்தப் பணத்தை எடுத்து மகனிடம் கொடுத்தார். அந்த பணத்தை சோமு மாற்ற சென்றபோது தான் அந்த பணம் செல்லாத நோட்டு என்ற அதிர்ச்சியான தகவல் அவருக்கு தெரியவந்தது. 

அதாவது பணம் மதிப்பிழப்பு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற விஷயம் அவருக்குத் தெரியாமல் இருந்துள்ளது. இவ்வாறு 24 ஆயிரம் ரூபாய் செல்லாது என்று கேள்விப்பட்டு அவர் வேதனை அடைந்தார். இதுதொடர்பான செய்தி பத்திரிகைகளில்  வெளிவந்தது. இந்நிலையில் சோமு தனது மனைவியுடன் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். 

ADVERTISEMENT

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் உடனடியாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வாங்கிக் கொண்டு அதற்குப் பதிலாக 25 ஆயிரம் காசோலையை அந்த தம்பதியிடம் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதிகள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

Tags : Erode
ADVERTISEMENT
ADVERTISEMENT