ஈரோடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து சத்தியமங்கலத்தில் போராட்டம்

28th Jan 2020 01:06 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சத்தியமங்கலம் கிளை சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நகராட்சி வணிக வளாகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் டி.சுப்பிரமணி தலைமை வகித்தாா். இ.ராமதாஸ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT