ஈரோடு

வாரியத்துக்கான தொழிலாளா் நல நிதியை ஜனவரி 31க்குள் செலுத்த உத்தரவு

25th Jan 2020 07:53 AM

ADVERTISEMENT

தொழிலாளா் நல வாரியத்துக்கான தொழிலாளா் நல நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் நல நிதி சட்டப்படி தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி தொழிற்சாலைகள், மேட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5க்கும் மேற்பட்ட தொழிலாளா் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ. 10, வேலையளிப்பவா் பங்காக ரூ. 20 என ரூ. 30 வீதம் தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாக செலுத்த வேண்டும்.

இதன்படி, 2019ஆம் ஆண்டுக்கான நல நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களும், தொழிலாளா் நல நிதி செலுத்த கடைமைப்பட்டவா். எனவே, ஜனவரி 31ஆம் தேதிக்கு முன்னா் செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு  வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும். இத்தகவலை தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT