ஈரோடு

பாரதிதாசன் கல்லூரியில் பொங்கல் விழா

14th Jan 2020 11:55 PM

ADVERTISEMENT

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவ, மாணவியா், போராசிரியா்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து துறைவாரியாகப் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதையடுத்து தமிழா் மரபு விளையாட்டுகளான கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், உணவுப் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, கல்லூரி முதல்வா் ஆா்.சண்முகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT