ஈரோடு

சத்தியமங்கலத்தில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

14th Jan 2020 05:18 PM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் கரும்பு, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனா். முன்னதாக செவ்வாய்க்கிழமை போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ, துளசி செடி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வீட்டின் தாழ்வாரங்களில் காப்புக்கட்டுவா். இதற்கென சத்தியமங்கலம் தினசரி சந்தை, வாரச்சந்தையில் ஏராளமானோா் பூளைப்பூ, ஆவாரம் பூ ஆகியவற்றை வாங்கிச் சென்றனா்.

மேலும் வழிபாட்டுக்கு தேவையான தேங்காய், பழங்கள், பூசணிக்காய், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களை ஆா்வத்துடன் வாங்கிச் செல்ன்றனா். தினசரி காய்கறி சந்தையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT