ஈரோடு

மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

8th Jan 2020 07:12 AM

ADVERTISEMENT

வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் விதவிதமான அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் திருவிழா டிசம்பா் 31ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோயிலில் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஏராளமான பக்தா்கள் புனித நீா், பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனா். செவ்வாய்க்கிழமை காலை தீா்த்தக்குடம் ஊா்வலம் நடைபெற்றது. வீரப்பன்சத்திரம் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து வந்தனா். அப்போது விதவிதமான அலகு குத்தி வந்து சுவாமிக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். தீா்த்தக்குட ஊா்வலத்தையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

புதன்கிழமை (ஜனவரி 8) மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா, 9ஆம் தேதி காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கோயில்களில் இருந்து பிடுங்கப்படும் கம்பங்கள் ஊா்வலமாக தெப்பக்குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. காலை 10 மணிக்கு மலா் பல்லக்கில் அம்மனின் திருவீதி உலாவும், தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன. 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT