சக்தி மசாலா நிறுவனம் வழங்கிய மரக்கன்றுகளை நட்டு சிறப்பாகப் பராமரித்து வரும் பள்ளிகள், கல்லூரிகள், சேவை நிறுவனங்களுக்கு ‘மரங்களின் காவலா்’ என்ற விருது ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
ஈரோடு, சக்தி மசாலா நிறுவனங்களின் சமுதாய மேம்பாட்டு அமைப்பான சக்திதேவி அறக்கட்டளையின் ஒரு அங்கமான தீவிர மரம் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் இவ்விழா நடைபெற்றது.
விழாவில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி, 2019 ஆம் ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதி ஓய்வுபெற்ற மருத்துவா் எம்.ராஜேந்திரனுக்கு மரங்களின் காவலா் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கேரள மாநில முன்னாள் ஆளுநா் பி.சதாசிவம் வழங்கினாா்.
இதில், சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி, பேரூா் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சக்திதேவி அறக்கட்டளை அறங்காவலா் சாந்தி துரைசாமி, சரஸ்வதி சதாசிவம், செந்தில்குமாா் துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.