ஈரோடு

வாசவி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

3rd Jan 2020 08:08 AM

ADVERTISEMENT

ஈரோடு வாசவி கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். எழுத்தாளா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்பிரமணியம் வரவேற்றாா்.

உலகத்தில் 43 நாடுகளில் வாழும் தமிழா்களால் ஜனவரி 1ஆம் தேதி உலகத் திருக்குறள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஜனவரி 1ஆம் தேதியை உலகத் திருக்குறள் நாளாக அறித்து அரசு சாா்பில் கொண்டாடப்பட வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநா் சாந்தி துரைசாமி, கல்லூரி முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT