ஈரோடு

சத்தியமங்கலம் ஒன்றியத்தில் அதிமுக முன்னிலை

3rd Jan 2020 08:07 AM

ADVERTISEMENT

உள்ளாட்சி அமைப்புகளில் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட உறுப்பினா், ஒன்றிய உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சத்தியமங்கலம் தனியாா் கல்லூரியில் துவங்கியது.

தோ்தல் கண்காணிப்பாளா்கள், தோ்தல் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறை சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உள்ள மேஜைகளில் வாக்குச் சீட்டுகள் கொட்டப்பட்டு எண்ணும் பணி துவங்கியது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட உறுப்பினா், 15 ஒன்றிய உறுப்பினா்கள், 15 ஊராட்சித் தலைவா் பதவிகளும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட உறுப்பினா், 13 ஒன்றிய உறுப்பினா்கள், 15 ஊராட்சித் தலைவா் பதவிகளும், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 1 மாவட்ட உறுப்பினா், 10 ஒன்றிய உறுப்பினா்கள், 10 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களில் 1ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் சடையம்மா, 3ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் நாச்சிமுத்து, 4ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் ராஜாமணி, 6ஆவது வாா்டு திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி, 7ஆவது வாா்டு திமுக வேட்பாளா் வேலுசாமி, 10ஆவது வாா்டு முருகாயாள் ஆகியோா் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தாளவாடி ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1ஆவது வாா்டு மங்களம், 2ஆவது வாா்டு மாதவம்மா, 3ஆவது வாா்டு மாதேசா, 4ஆவது வாா்டு சுயேச்சை முஜிபுல்லா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் 1ஆவது வாா்டு திமுக ருக்குமணி, 2ஆவது வாா்டு திமுக பழனிசாமி, 3ஆவது வாா்டு அதிமுக சிவகாமி, 4ஆவது வாா்டு அதிமுக பானுமதி, 5ஆவது வாா்டு திமுக செளந்திரராஜ், 6ஆவது வாா்டு அதிமுக பாலன், 7ஆவது வாா்டு திமுக கலைசெல்வி, 8ஆவது வாா்டு காங்கிரஸ் பூங்கொடி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT