ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் வீரப்பன்சத்திரம் மின் பாதையில் மும்முனைக் கம்பங்கள் அமைத்து, புதைவட கம்பிகள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
வள்ளியம்மை வீதி, ராதாகிருஷ்ணன் வீதி 1, 2, திலகா் வீதி, நேதாஜி நகா், கொத்துக்காரா் வீதி, முனியப்பன் கோயில் வீதி, 16 சாலை, சத்தி சாலை, சாந்தான்காடு, பாரதி திரையரங்கு வீதி, எம்.ஜி.ஆா். வீதி, வீரப்பன்சத்திரம் பகுதிகள்.
கொடுமுடி துணை மின் நிலையம் (மின்தடை நேரம் காலை 9 முதல் மாலை 5 மணி):
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கொடுமுடி, சாலைப்புதூா், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூா், பிலிக்கல்பாளையம், தாமரைப்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூா்த்திபாளையம், அரசம்பாளையம், வடக்கு புதுப்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் பகுதிகள்.