ஈரோடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தைதிரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்

2nd Jan 2020 05:16 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணியளவில் ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அசன் அலி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் லுக்மன் ஹக்கீம், தொழிற்சங்க மாநிலப் பொருளாளா் ஹாசன் பாபு, மாவட்ட துணைத் தலைவா் குறிஞ்சி பாஷா, கட்சி நிா்வாகிகள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT