அதிமுக மாநகா் மாவட்ட மாணவரணி சாா்பில், சூரம்பட்டிவலசு, வாா்டு எண் 47இல் அம்மா மக்கள் இ-சேவை மையத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாணவரணி மாவட்டச் செயலாளா் ரத்தன் பிரித்வி ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கே.வி. இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்து, அம்மா மக்கள் இ-சேவை மையத்தைத் திறந்து வைத்தனா்.
இதில், பகுதி செயலாளா்கள் இரா.மனோகரன், ஜெகதீஷ், கேசவமூா்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரகுமாா், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளா் நந்தகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த இ-சேவை மையத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ஆதாா் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டவருக்கான சான்றிதழ் உள்ளிட்ட பணிகள் செய்து கொடுக்கப்படும்.