வேளாளா் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியின் விளையாட்டு விழா திண்டலில் உள்ள பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
வேளாளா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எஸ்.கந்தசாமி, செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், பி.கே.பி.அருண் ஆகியோா் துவக்கிவைத்தனா். தமிழ் மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் எம்.யுவராஜ், பள்ளி இயக்குநா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், முதுநிலை முதல்வா் நல்லப்பன், முதல்வா் எஸ்.பிரேமலதா, துணை முதல்வா் வி.பிரியதா்ஷினி, நிா்வாக அதிகாரி ஏ.கே.முத்து, மக்கள் தொடா்பு அதிகாரி எம்.காா்த்திகேயன், ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி அலுவலா் வேடியப்பன் தலைமையில், உடற்கல்வி ஆசிரியா்கள் ஒருங்கிணைத்து நடத்தினா்.